💥🎖A4 தாளின் ஒரு பக்கத்தில் 135 தமிழக கோயில்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் யமுனா💐💐

Опубликовано: 08 Март 2023
на канале: Around The World with KK
387
43

💥🎖A4 தாளின் ஒரு பக்கத்தில் 135 தமிழக கோயில்களை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார் யமுனா💐💐 #atwwkk #worldrecord #worldrecords

உலக அளவில் முதன்முறையாக 3 மணி நேரத்தில் 135 தமிழக கோயில்களின் உருவத்தை வரைந்து தஞ்சை அருகே வல்லத்தை சேர்ந்த மாணவி ஏ.யமுனா சாதனை

தஞ்சாவூர், மார்ச்.09- உலக அளவில் முதன்முறையாக 3 மணி நேரத்தில் A4 அளவு தாளில் ஒரே பக்கத்தில் மொத்தம் 135 தமிழக கோ யில்களின் உருவத்தை வரைந்து அருகே வல்லத்தை சேர்ந்த மாணவி ஏ. யமுனா சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை சோழன் புக் ஆப்

தஞ்சை

வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்-ல் பதிவாகியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் நடந்த நிகழ்ச்சியில் வல்லம் பகுதியை சேர்ந்த ஏ யமுனா என்ற கல்லூரி மாணவி ஏ 4 தாளின் ஒரு பக்கத்தில் தொடர்ச்சியாக 3 மணி நேரம் 135 தமிழக கோயில்களின் தோற்றத்தை வரைந்து சாதனை படைத்தார்.

மயிலாடுதுறை மயூர நாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், தஞ்சை பெரிய கோயில், கன்னியாகுமரி கோயில், மாமல்லபுரம்

கோயில், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உட்பட மொத்தம் 135 தமிழக கோ யில்களில் தோற்றத்தை இடைவிடாமல் மொத்தம் மூன்று மணி நேரத்தில் வரைந்தார்.

இந்த சாதனைசோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்-ல் பதிவு செய்யப்பட்டது இதற்காக மாணவி யமுனா கோ யில்களின் தோற்றத்தை

வரைவதை சோழன் புக் ஆப் வேர்ல்ட் மண்டல தலைவர் செல்வராஜ், தஞ்சை மாவட்ட தலைவர் முனைவர் சந்தனசாமி, திருச்சி மாவட்ட பொதுச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டு இந்த சாத வித்தார். னையை பதிவு செய்தனர்.

தொடர்ந்து மாணவிக்கு இந்த உலக சாதனை குறித்து பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

பெண் தொழில் முனைவோர் ரபியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவி யமுனா பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

இதுகுறித்து மாணவி யமுனா கூறுகையில் சிறுவயதில் இருந்து ஏதாவது சாதனை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்தது. ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். மேலும் பேச்சுப்போட்டி உட்பட பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளேன் அந்த வகையில் இதுவரை யாரும் செய்யாத வகையில் ஏ 4 தாளின் ஒரே பக்கத்தில் 135 கோயில்கள் வரைவதற்கு கடந்த ஒரு மாதமாக பயிற்சி எடுத்துக் கொண்டேன். பின்னர் சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்க்கு இதனை அனுப்பி வைத்தேன். தொடர்ந்து மகளிர் தினமான நேற்று சோழன் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் குழுவினர் முன்பாக இந்த சாதனை செய்து காட்டினேன். இந்த சாதனை எனது பெற்றோருக்கு நான் அளிக்கும் பரிசாகும். இவ்வாறு அவர் தெரி

இதற்கான ஏற்பாடுகளை டோபெஸ்ட் கலைக் குழும் இயக்குனர் நிர்மல் ராஜ், ஒருங்கிணைப்பாளர் கலைக்கோவன், கார்த்திக், வசீகரன் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் திறன் அவார்ட்ஸ் இயக்குனர் மாதவன், தொழிலதிபர் துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Follow Me On:
--------------------------------------
Facebook :   / kalaikovan.p.  .

Instagram :   / aroundthewo.  .

Twitter :   / atwwkk  

Mail: [email protected]

WhatsApp : +91 7200645420



atwwkk,news in tamil,#atwwkk,@atwwkk,tripy chittukuruvi,world record,guinness world records,world record book,guinness world record,book of world record,guinness book of world records,temple,temple run 2,temple run in real life,temple run,drawing,drawing tutorial,how to draw,drip effect drawing,draw,record,womens,womens club gor,womens club ponch